சென்னை அணி 17.4 ஓவரில் 71 ரன்கள் எடுத்து பெங்களூரு அணியை வென்றது.
12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. இதையடுத்து டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே பெங்களூரு அணி தடுமாறிய நிலையில் ஹர்பஜன் பந்து வீச்சில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட விராட் கோலி 6 (12) ம், மொயின் அலி 9, டிவில்லியர்ஸ் 9, ஹெட் மேயர் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து வந்த வீரர்கள் சிவம் டுப் 2, கிராண்ட் ஹோம் 4 என அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். இறுதியில் 17.1 ஓவரில் 70 ரன்களில் சுருண்டது . அதிகபட்சமாக பார்திவ் பட்டேலும் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை அணியில் ஹர்பஜன் 3, இம்ரான் தாஹிர் 3,விக்கெட்டுகளும் ஜடேஜா 2, பிராவோ 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து சென்னை அணியில் தொடக்க வீரர்களாக சேன் வாட்சனும், அம்பத்தி ராயுடுவும் களமிறங்கினர். சேன் வாட்சன் 0 , ரன்களில் சாஹல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து அம்பத்தி ராயுடு28, ரெய்னா19, ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் 17.4 ஓவர்களில் 71 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாதவ் 13*, ஜடேஜா 06* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் களத்தில் இருந்தனர்.