ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது ,அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 44 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே அணி தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதன் பிறகு 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணி களமிறங்கியது .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் – டு பிளிஸ்சிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ருதுராஜ் 45 ரன்களில் ஆட்டமிழக்க ,அடுத்து வந்த மொயீன் அலி 17 வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ரெய்னா 2 ரன்னும் ,டு பிளிஸ்சிஸ் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு 5-வது விக்கெட்டுக்கு அம்பத்தி ராயுடு உடன் ,கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றனர்.இதில் கடைசி ஓவரில் 4-வது பந்தில் தோனி சிக்ஸர் அடிக்க இறுதியாக சென்னை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.