14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 44 -வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது .இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் குவித்தது. இதன் பிறகு களமிறங்கிய சென்னை அணி 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இறுதியாக 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் குவித்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு சென்னை அணி முன்னேறி உள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .அப்போது கேப்டன் தோனி கூறும்போது ,”அடுத்த ஆண்டு இன்னும் கூடுதல் பலத்துடன் திரும்பி வருவோம்” என்றார். அதே போல் நடப்பு சீசனில் கேப்டன் தோனி சொன்னதை நிறைவேற்றி காட்டியுள்ளார். இதனால் ப்ளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முதல் அணியாக தகுதி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.