சிஎஸ்கே அணிக்காக 200 வது போட்டியில் விளையாடியதை , நான் பெருமையாக கருதுகிறேன் என்று கேப்டன் டோனி கூறினார் .
நேற்று மும்பையில் நடைபெற்ற ,8 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.இறுதியாக சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில்,பஞ்சாப் கிங்க்ஸை வீழ்த்தி , சிஎஸ்கே வெற்றி பெற்றது. சிஎஸ்கே- வின் வெற்றி பற்றி கேப்டன் டோனி கூறுகையில், நேற்று நடைபெற்ற போட்டியில் பந்துவீச்சாளர்களால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக தீபக் சாஹர் அசத்தலான பவுலிங் அணியை வெற்றி அடையச் செய்தது. அவர் 13 ரன்களை விட்டுக்கொடுத்து பஞ்சாப் அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் தீபக் சாஹர் அனுபவமுள்ள பலராக திகழ்ந்து வருகிறார்,என்று டோனி பாராட்டியுள்ளார் . அதோடு கேப்டன் டோனி சிஎஸ்கே அணிக்காக 200 வது போட்டியில் விளையாடியதை , நான் பெருமையாக கருதுகிறேன். கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை ஒரு நீண்ட பயணமாக தொடர்ந்து வருகிறது என்றார் . தற்போது மும்பை மைதானம் எங்களுக்கு தகுந்தவாறு மாறி வருகிறது என்று தோனி கூறியுள்ளார்.அடுத்து சிஎஸ்கே அணியின் 3 வது போட்டியில் வருகின்ற 19 ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதுகிறது .