Categories
கிரிக்கெட் விளையாட்டு

மருத்துவர் சஸ்பெண்ட்…. ”இப்படி நடந்து இருக்க கூடாது” சிஎஸ்கே அணி வருத்தம் …!!

லடாக்கில் நடந்த எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக ட்விட் செய்த சிஎஸ்கே அணியின் மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்

இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்ட மோதலினால் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். தனது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இவர்களுக்குப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் மருத்துவர் மது தொட்டப்பிலிலின் லடாக் எல்லை பிரச்சினை குறித்தும், பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மிகவும் மோசமான ரசனையை வெளிப்படுத்தும் விதமாக இவரது பதிவு இருந்ததால் சிஎஸ்கே நிர்வாகம் இவரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சிஎஸ்கே அணி தெரிவித்ததாவது, மருத்துவர் மது தொட்டப்பிலிலின் தனிப்பட்ட ட்வீட் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறியவில்லை. அவர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியாமல் அவர் பதிவு செய்த மோசமான ட்விட்டர்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருந்துகிறோம்” என தெரிவித்திருந்தது

Categories

Tech |