Categories
கிரிக்கெட் விளையாட்டு

சிஎஸ்கே அணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா …..! உற்சாகத்தில் ரசிகர்கள் ….!!!

2021 சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

14-வது ஐபிஎல் சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது .இதில் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .

இதில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதனிடையே தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகின்ற 20ஆம் தேதி  சிஎஸ்கே அணிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |