Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK அணியில் விளையாட ஆசை ….! தினேஷ் கார்த்திக் விருப்பம் ….!!!!

2022  ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி  நடைபெற உள்ளது.
2022 ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் வருகின்ற 12, 13-ம் தேதி  நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.இந்நிலையில் தற்போது அவர் கொல்கத்தா அணியிலிருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியுடன் இணைந்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியார்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், ” நான் சென்னையை சேர்ந்தவன். சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது சிறப்பானதாக இருக்கும். எந்த அணியில் விளையாட வாய்ப்பு வந்தாலும் அந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் “இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |