Categories
தேசிய செய்திகள்

CSK வெற்றி பெறணும்… தோனியின் உருவத்தை 12 அடி ரங்கோலியில்… தத்ரூபமாக வரைந்து அசத்திய பெண்…!!!

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தோனியின் உருவத்தை தத்ரூபமாக ஒரு பெண் வரைந்துள்ளார்.

நேற்று ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அந்தப்பெண் ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த அறிவழகி ஒரு ஓவிய பட்டதாரி ஆகும். இவர் தலைவர்களின் பிறந்த நாளின் போது அவர்களின் உருவங்களை வரைந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதன்படி தற்போது சென்னை அணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக 12 அடி உயரமும் 12 அடி அகலத்தில் தோணியின் உருவத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். இரண்டு நாட்களாக 7 கிலோ கோலமாவை கொண்டு தோனியின் உருவத்தை வரைந்து வித்தியாசமான முறையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஓவியம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரின் ஆசைப்படியே நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.

Categories

Tech |