ஐபிஎல் 15-வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே அணி தங்களது வீரர்களை தக்க வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது நான்கு வீரர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதுவரை 8 அணிகள் மட்டும் ஆடி வந்த நிலையில் அடுத்த சீசனில் இரண்டு அணிகள் கூடுதலாக உள்ளன. அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இந்நிலையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றது என்பது குறித்து தகவல் வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் சிஎஸ்கேவில் இந்த முறை அடுத்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி இடம்பெற்றுள்ள நிலையில் ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி தக்கவைக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. டுப்லஸ்ஸிஸ் தக்கவைக்கபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொயின் அலி தக்க வைக்கப்பட்டுள்ளது சற்று விசித்திரமாக உள்ளது.