மராட்டிய மாநிலம் புனே நகரில் கொந்தவா பகுதியில் 11 வயது சிறுவன் 20-க்கு மேற்பட்ட தெரு நாய்களுடன் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இதனை பார்த்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இது தொடர்பாக நியான் தேவி குழந்தைகள் நல தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அமைப்பைச் சேர்ந்த சகஸ்ரபுத்தே கூறியதாவது, கொந்தவா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு சிறுவனை அடைத்து வைக்கப்பட்டிருப்பதைை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஜன்னல் வழியாக பார்க்கும் பொது பாதிக்கப்பட்டவன் போல் காணப்பட்டு இருக்கிறான்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அமைப்பின் உறுப்பினர்கள் பார்க்கும்போது குடியிருப்பு பூட்டிருப்பதாகவும் உள்ளே சிறுவனும், நாய்களும் இருந்ததாகவும் அதில் நான்கு நாய்கள் உயிரிழந்த நிலையிலும் கிடந்துள்ளது. மேலும் அந்தக் குடியிருப்பில் நாய்களின் கழிவுகளை அகற்றப்படாமல், தூய்மையற்ற நிலையில் இருந்த சூழலில் சிறுவன் அழைக்கப்பட்டு வைத்துள்ளான். இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பாக போலீசாரும் எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் நாங்கள் சிறுவனின் பெற்றோர்களிடம் பேசினோம் . இதனைத் தொடர்ந்து அவர்கள் குழந்தையை மீட்டு தரும்படி போலீஸாரிடம் உதவி கேட்டனர். பின்பு சிறுவனை மீட்டு விட்டோம். இருப்பினும் காவல்துறையினர் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இது தொடர்பாக குழந்தைகள் நல குழுவிடம் தெரிவித்து உள்ளோம்.
இதனை தொடர்ந்து சிறுவன் நாய்களுடன் இரண்டு வருடங்களாக அடைக்கப்பட்டு இருந்ததால் அவனது செயல்கள் பாதிப்புஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அவன் நாய்கள் போலவே செயல்படுகிறான் . இதனால் அவனது பள்ளிப் படிப்பும் நின்றுவிட்டது. இதனைத்தொடர்ந்து சிறுவனின் முறையான சிகிச்சை, கவுன்சிலிங் வழங்க காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் குழந்தைகள் நல குழுவின் உத்தரவுகளையும் பின்பற்றி கேட்டுக் கொண்டுள்ளோம். சிறுவனின் தந்தை கடை நடத்தி வருவதாகவும் தாயார் பட்டப்படிப்பு படித்து உள்ளதாகவும் இவர்கள் இருவரும் நாய்களிடம் மிக அன்புடன் இருப்பார்கள். அதனால்தான் அவற்றை வீட்டில் வைத்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் மூத்த காவல் ஆய்வாளர் சர்தார் பாட்டில் இரண்டு வருடமாக நாய்களுடன் சிறுவனை அடுத்து வைத்து பாதிப்பை ஏற்படுத்தியதற்காக பெற்றோரை கைது செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.