கனடா முழுக்க, இந்த வார கடைசியில், வாகனங்களுக்கான எரிபொருளின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் கச்சா எண்ணெய்க்கான விலை குறைந்ததை தொடர்ந்து கனடா நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விலை லிட்டருக்கு 10 சென்டுகள் வரை குறைய வாய்ப்பிருப்பதாக Canadians for Affordable Energy அமைப்பிற்கான தலைவர், மற்றும் அந்த துறை சார் பகுப்பாய்வு வல்லுநர் Dan McTeague கூறியிருக்கிறார்.
மேலும், ஒரு மாகாணத்தில் விதிக்கப்பட்ட வரியின் அடிப்படையில், ஒரு லிட்டருக்கு 10-லிருந்து 11 சென்ட்கள் வரை எரிபொருள் விலை குறைக்கப்படலாம் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த விலைக் குறைவு ஏற்படலாம். எனினும் அட்லன்டிக் கனடா மாகாண மக்கள் மட்டும், இதற்காக அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா மாறுபாட்டால் உலக சந்தைகளில் அச்சுறுத்தல் ஏற்பட்டு, பங்குகள் சரிவடைந்ததைத்தொடர்ந்து கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கிறது. எனினும் அதிக நாட்களுக்கு அதன் விலை குறைந்து இருக்காது. எனவே, தற்போது விலை குறைவாக இருப்பதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.