Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி… 2-ஆம் இடத்தில் ரஷ்யா…!!!

இந்திய நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்தி ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.

ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தும் அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் நட்பு நாடுகளுக்கு கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய்யின் சந்தை மதிப்பைவிட பேரலுக்கு 30 அமெரிக்க டாலர்கள் குறைவாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது.

அதன்படி, இந்தியா, ஈராக் நாட்டிடமிருந்து தான் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்ததாக சவுதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்தது. ஆனால், தற்போது ரஷ்யா, சவூதி அரேபியாவை முந்தி இந்தியாவிற்கு அதிகமான கச்சா எண்ணெய் வழங்குவதில் இரண்டாம் நாடாக இருக்கிறது.

Categories

Tech |