இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள்.
உலக நாடுகளில் தற்போது ஓமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு பரவி வருகிறது. எனவே இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில் ஒமிக்ரான் பாதித்து ஒருவர் பலியாகியிருப்பதாக நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருக்கிறார்.
அதன்பின்பு இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் லண்டன் நகரில் இருக்கும் மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்காக மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். அங்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த போராட்டமே நடந்திருக்கிறது.
மக்கள் கூட்டம், மருத்துவமனைகளில் குவிந்து காணப்படுகிறது. இதுகுறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளதாவது, பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால் ஒமிக்ரான் தொற்று குறையும் என்று அறிவியல் உலகம் தெரிவிக்கிறது. எனவே அனைத்து மக்களுக்கும் ஒரு மாதத்திற்குள் மற்றொரு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.