Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வீடியோ கான்பரன்ஸில் நெரிசல்: அரியர்ஸ் வழக்கு நிறுத்தம் ….!!

அரியர்ஸ் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பரன்சில் ஏராளமானோர் நுழைந்து இடையூறு ஏற்பட்டதால் வழக்கு விசாரணை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்று அறிவித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு 26வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பாலும் மதிய நேரத்தில் தான் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்ற நிலை இருக்கிறது.

இதனிடையே நீதிமன்றம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடப்பதால் காலை நீதிமன்றம் தொடங்குவதற்கு முன்பிருந்தே வீடியோ கான்பரன்சிங் லிங்கை கிளிக் பண்ணி செய்து 300க்கும் மேற்பட்டோர் லாகின் செய்து இருக்கிறார்கள். வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள் மற்றும் மாணவர்கள் என 350க்கும் அதிகமானவர்கள் இணைந்து தங்களது ஆடியோவை மியூட் போடாமல் இருந்ததால் நீதிமன்ற பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

தங்களிடமே பேசிக்கொள்வது, வீட்டில் உள்ள தொலைக்காட்சி ஒலி கேட்பது, குழந்தைகள் அழுவது போன்ற சத்தங்கள் கேட்டதால் நீதிமன்றப் பணிகள் இடையூறாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்  பிறகும் இந்த சத்தம் ஓய்ந்ததாக தெரியவில்லை. எனவே இதே போன்ற நிலை நீடித்தால் தங்களது வழக்கை விசாரிப்பது நின்றுவிடும் என்று இரு முறை நீதிபதிகள் எச்சரித்தும் அமைதி ஏற்பட வில்லை. எனவே வழக்கை விசாரிப்பது நிறுத்திவிட்டு, எந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், முறையீடும் நேரத்தில் தவிர்த்துவிட்டு நீதிபதிகள் நீதிமன்றத்தை விட்டு இறங்கி விட்டார்கள்.

இதையடுத்து வழக்கறிஞர் மூலமாக தேவை இல்லாதவர்களை வெளியேறும்படி அறிவுறுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்தவர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது என்பதால் வெளியேறும்படி அறிவித்திருக்கிறார்கள். அதன்பிறகும் மாணவர்கள் வெளியேறாததால்  நீதிமன்ற அலுவலர்கள் மூலமாக தேவையில்லாதவர்களை  லாகின் மூலம் வெளியேற்றி வருகின்றார்கள்.

Categories

Tech |