Categories
தேசிய செய்திகள்

கீழே கிடந்த பாட்டில்… “காக்கை செய்த செயல்”… வியப்படைந்த மக்கள்..!!

கீழே கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலை காகம் ஓன்று வாயால் கவ்விச் சென்று, குப்பைத் தொட்டியில், லாவகமாக போடும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் குப்பை மற்றும் நெகிழி பொருட்கள் பறந்து விரிந்து கிடக்கிறது. அதை உபயோகப்படுத்தி விட்டு கண்ட இடங்களில் பலர் தூக்கி போட்டு விட்டு செல்கின்றனர். பலர் குப்பை மற்றும் நெகிழிபொருட்களை குப்பை தொட்டியில் போடாமல் நமக்கு என்ன என்று கடந்து போய் விடுவார்கள். ஆனால் காகம் ஓன்று செய்த செயல் அனைவரையும் வியப்படையச் செய்ததுடன், நீங்களும் இதை செய்யுங்கள் என்று விழிப்புணர்வு செய்ததை போன்று இருந்தது.

பொதுவாக நெகிழியற்ற உலகை நோக்கி, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் பயணித்து வருகின்றன. இந்த வகையில், நெகிழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், சுகாதரமற்ற சூழலை காத்திடுவது பற்றி எடுத்தியம்பும் வகையிலும், காகத்தின் செயல்பாடு இருப்பதாக, சமூக மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |