அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது அதன் வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து 185 கி.மீட்டர் தூரத்திலும், புதுவையில் இருந்து 115 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது.
கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல், தற்போது 110 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. சென்னையில் தற்போது 20 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் நிவர் புயல் நாளை அதிகாலை 2 மணிக்கு கரையை கடக்கும் என தேசிய மீட்புப் படைத் தலைவர் பிரதான் தெரிவித்துள்ளார்.