Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா.! இதுல அப்படி என்ன இருக்கு..? ரூ.7.80 லட்சத்திற்கு விற்பனையான மீன்… வெளியான ஆச்சரிய தகவல்..!!

பாகிஸ்தானில் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்த குவாதர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் அவற்றில் ஒரு மீனை ரூ. 7.80 லட்சத்திற்கு விற்பனை செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுமார் 17 லட்சத்திற்கு விற்பனையான இந்த அரியவகை குரோக்கர் மீன் தற்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் என்ற பகுதியில் சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீனானது ரூ.7.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் சீன-கொரியாவிற்கு இடையே உள்ள சவுதி எல்லோ கடல் பகுதியில் அதிகமாக காணப்படும் இந்த அரிய வகை மீன்கள் கடலின் ஆழத்தில் வாழும் தன்மை கொண்டிருப்பதால் இதனை மீனவர்களால் மிக எளிதில் பிடித்து விட முடியாது. அதுமட்டுமல்லாமல் கருவுறும் காலத்தில் ( 2 மாதம் ) மட்டுமே கடலின் மேற்பகுதி அல்லது மையப்பகுதிக்கு வரும் இந்த அரிய வகை மீன்களை மீனவர்கள் போட்டி போட்டு பிடித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்த மீன்கள் மிகவும் அரிய வகையை சேர்ந்தது என்பதால் அதிக விலைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் குரோக்கர் மீன்கள் 1970-ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு வெகுவாக குரோக்கர் மீன்களின் எண்ணிக்கையும் கடலில் குறைந்து கொண்டே வந்ததால் இந்த மீனை சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு சிவப்பு பட்டியலில் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் இந்த மீன் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான முக்கிய காரணம் இதிலுள்ள மருத்துவ குணங்களே ஆகும். அதோடு மட்டுமல்லாமல் அறுவை சிகிச்சை முடிவடைந்தவுடன் போடப்படும் தையலில் இந்த மீனில் உள்ள ஏர் பிளாடர் என்ற பகுதி பயன்படுகிறது. இவை பக்க விளைவுகள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் காயத்தை மிக விரைவில் குணமாக்கும் தன்மை கொண்டுள்ளதாக மருத்துவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக இந்த குரோக்கர் மீன்கள் இதயம் சம்பந்தமான அறுவை சிகிச்சையில் காயங்களை குணப்படுத்துவதற்கு மிக முக்கியமாக பயன்படுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கேன்சரால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கூட இது அருமருந்தாக அமைகிறது. மேலும் இந்த குரோக்கர் மீன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்வு நாளையும் அதிகரிக்கும் குணம் கொண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |