முகநூல் பக்கத்தில் இளம்பெண் ஒருவர் பற்றி அவதூறாக பேசிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் 23 வயதுடைய இளம்பெண் ஒருவர் பற்றி இளைஞர் முகநூல் பக்கத்தில் அவதூறாக பேசி வந்துள்ளார். இது தொடர்பாக அந்த இளம்பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான செந்தில் குமாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனை அடுத்து சைபர் பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது இளம்பெண்ணின் உறவினரான கார்த்தி என்பவர் தான் முகநூல் பக்கத்தில் அவதூறாக பேசியது தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் கார்த்தி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.