Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கிரிக்கெட்டில் பெஸ்ட் பினிஷர் நீங்கதான் ” …. தல தோனிக்கு விராட்கோலி புகழாரம் ….!!!

டெல்லிக்கு அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக  சிறப்பான பினிஷிங்கை கொடுத்த தல தோனியை ,விராட் கோலி பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .

2021 சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த குவாலிபயர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் குவித்தது. இதன்பிறகு களமிறங்கிய சென்னை அணி 173 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. இதில் பரபரப்பான நடந்த ஆட்டத்தில் இறுதியில் சென்னை அணி வெற்றி பெற 11 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது களமிறங்கிய கேப்டன் தோனி ஒரு சிக்சர் 3 பவுண்டரி அடித்து விளாசி 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து சிஎஸ்கே அணி வெற்றி பெறச் செய்தார். எனவே தோனியின் சிறந்த  பினிஷிங்கை அவரது ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பலரும் தோனிக்குவாழ்த்து தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து  ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கிங் இஸ் பேக்’ என பதிவிட்டுள்ளார் . அதோடு ‘கிரிக்கெட்டில் தோனி தலை சிறந்த பினிஷிங் என்றும், மீண்டும் ஒரு முறை தன்னை துள்ளி குதிக்க செய்தார் ‘என்று அவரை  பாராட்டி பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |