டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு வர உள்ளனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் தொடங்க இருக்கிறது.
ஆகையால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜனவரி 27 ஆம் தேதி சென்னைக்கு வரவிருக்கின்றனர்.இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பின் இங்கிலாந்து அணியினரும் வரும் 27-ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் வெவ்வேறு நகரத்தில் இருந்து வருவதால் அவர்கள் வரும் 27ம் தேதியில் இருந்து தனிமைப் படுத்தப்பட உள்ளனர் என்று இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு வருகை புரியும் அனைத்து வீரர்களையும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்க உள்ளனர்.