இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போட்டோவை கிழித்ததற்கு எதிர்ப்பாக அஷ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த 25-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின், ஜாஸ் பட்லரை “மன் கட்” முறையில் அவுட் ஆக்கினார். இது அனைவரிடத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜோஸ் பட்லரை “மன் கட்” முறையில் அஸ்வின் அவுட் செய்ததற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இதற்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அஸ்வின் போட்டோவை கிழித்து தனது எதிர்ப்பை தெரிவித்து வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/gregjames/status/1112297247880957955
இந்த செயல் குறித்து அஸ்வின், ‘ நான் செய்த செயல் தவறு என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் இன்று நினைக்கலாம். ஆனால் நாளை அவரே கூட “மன் கட்” முறையில் விக்கெட்டை எடுக்க நேரிடும். கிரிக்கெட்டில் “மன் கட்” முறை இருக்கிறது. அதனால் அது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை’ என்று பதிலளித்துள்ளார்.
மேலும் என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு நான் சட்டவிரோதமாக எதையும் செய்யமாட்டேன் என்று தெரியும். இந்த சர்ச்சைக்குப் பின்பும் எனது அணியினர் எனக்கு துணை நிற்கின்றனர். பல கிரிக்கெட் வீரர்கள என்னிடம் வந்து நான் செய்ததில் எந்த ஒரு தவறும் இல்லை என்று சொல்கின்றனர். “மன் கட்” முறையில் நான் விக்கெட்டை எடுத்தது குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக பேசலாம். ஆனால் சர்ச்சை பேச்சுகள் என்னை துளியும் பாதிக்கவில்லை என்று அஷ்வின் விளக்கம் கூறியுள்ளார்.