Categories
உலக செய்திகள்

இலங்கை அரசை எதிர்த்து…. போராட்டக்காரர்களுக்கு குரல் கொடுத்த கிரிக்கெட் வீரர்கள்….!!!

இலங்கையில் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராடி வரும் நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் சிலர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

இலங்கையில் சுற்றுலாத்துறை முடங்கியதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதற்கு அதிபர் கோட்டபாய ராஜபக்சே தான் காரணம் என்று மக்கள் நாடு முழுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரரான சங்ககாரா, மக்களை எதிரிகளாக நினைக்கக்கூடாது. அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென்று கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் கேப்டனான மகேல ஜெயவர்த்தன, உரிமைகளுக்காக போராடும் மக்களை கைது செய்வது சரியாக இருக்காது. அவர்களை இன்னல்களிலிருந்து விரைவில் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணியினுடைய கேப்டனான திமுத் கருணாரத்னே போராட்டத்தில் குதித்திருக்கிறார்.

Categories

Tech |