இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் பிரீமியர் லீக் போட்டிகள் முறையாக நடப்பதாகவும் ஐபிஎல்லில் பணத்திற்கும் அணிக்கும் தான் முக்கியத்துவம் இருப்பதாகவும் டெல் ஸ்டெயின் கூறியுள்ளார்.
தற்போது நடந்த 2021 ஐபிஎல் ஏலத்தில் நட்சத்திர வீரர் டேல் ஸ்டெயின் தானாகவே முன்வந்து கலந்து கொள்ளாததை குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதாவது டி 20 லீக்குகளில் விளையாடுவதுதான் ஒரு வீரராக எனக்கு பலனளிக்கிறது. ஆனால் இந்த ஐபிஎல்லில் விளையாடும்போது அணியின் பெயருக்கும் வீரர்களுக்கு அளிக்கப்படும் பணத்திற்கும் தான் முக்கியத்துவம் உள்ளதாக எனக்கு தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் ஐபிஎல்லில் கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுகிறார்கள் என்பதே விவாதப் பேச்சாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்டெயின் கூறியுள்ளதாவது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் டி20 களில் பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.