ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்திலிருந்து 65% பாலூட்டி இனங்கள் சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றம் காரணமாக அழிந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகில் மிகப்பெரிய அளவில் பாலூட்டி இனங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சுமார் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி குளிர்ச்சியடைந்து அதன் காரணமாக பனி படலங்கள் விரிவடைந்தது, கார்பன் டை ஆக்சைடை மிக அரிதான ஒன்றாக மாறியது, கடல் மட்டம் குறைந்து, உயர்ந்த மரங்கள் கொண்ட காடுகள் அழிவை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் 3-ல் 2 பங்கு உயிரினங்கள் அழிந்து விட்டதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே பாலூட்டிகள் சில ஆப்பிரிக்காவில் உயிர் தப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆய்வில் 65% பாலூட்டி இனங்கள் அழிந்துள்ளதாக இணை ஆசிரியர் ஹெஷாம் சல்லம் தெரிவித்துள்ளார். அதேபோல் “தற்போதைய காலத்திற்கு முந்தைய காலநிலை மாற்றங்கள் குறித்த ஆய்வுகள் முக்கியமான ஒன்று. இதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளை தற்போதைய காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கும் என்பதனை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்” என்று ஹெஷாம் சல்லம் கூறியுள்ளார்.