ஒரே நேரத்தில் பசு மாடு இரண்டு கன்றுகளை ஈன்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செஞ்சேரி புதுதூரில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தெய்வத்தாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வளர்த்த பசுமாடு ஒன்று ஒரே நேரத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது.
இதனை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் பசு மாட்டையும், நலமாக இருக்கும் இரண்டு கன்றுகளையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் அங்குள்ள சில இளைஞர்கள் அந்த கன்றுகளுடன் நின்று செல்பி எடுத்து அதனை தங்கள் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.