Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பசுவின் சாணம்… “ஆயிரம் தடுப்பூசிக்கு சமம்”… வறட்டியில் ஒளிந்திருக்கும் மருத்துவம்..!!

வீட்டின் சுவரில் ஏன் வரட்டியை காயவைக்கவேண்டும். அதன் காரணம் பற்றி இதில் பார்ப்போம்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டது. அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள், வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை திகைக்க வைக்கலாம்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல். 18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும், ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால், வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள்.

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள், இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால், இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம், கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி, சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது.

சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர். மேலைநாட்டினர் அவற்றின் மகிமையை புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளவில்லை.

Categories

Tech |