Categories
மாநில செய்திகள்

#CovidVaccine… ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு… பரபரப்பு…!!!

தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரம் எடுத்ததை அடுத்து, பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முன்பை விட மக்கள் தற்போது ஆர்வமாக வந்து தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக முதல்வர் முக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ” குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முறையே 1000 பேருக்கு 533, 493, 446 #CovidVaccine ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், தமிழ்நாட்டில் 302 பேருக்குதான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு மற்ற மாநிலங்களுக்கு வழங்குவது போல், தமிழ்நாட்டிற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |