Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பிரேக்கிங் : மாணவருக்கு கொரோனா…… நீட் தேர்வு மையத்தில் பதற்றம்….!!

கரூரில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தேர்வு மையத்தில் வைத்து உறுதி செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல எதிர்ப்புகளுக்கு பிறகும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மையம் வைத்து நடைபெறும் இந்த தேர்வுகள் பல விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவதால் மாணவர்கள் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில், கரூர் டிஎஸ்பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர் நீட் தேர்வு மையத்திற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டார். இதனால் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த சக மாணவர்கள் இடையே பதற்றம் சூழ்ந்தது. இந்நிலையில் கொரோனா வழிமுறைகளின்படி அந்த மாணவர் தனி அறையில் தேர்வு எழுத வைக்கப்படலாம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |