Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. “இனி போன்லயே கொரோனா டெஸ்ட்”…. அசத்திய விஞ்ஞானிகள்….!!!!

செல்போனில் கொரோனா பரிசோதிக்கும் முறை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், செல்போனில்  கொரோனா பரிசோதனை செய்வதற்கான வழிமுறையை கண்டறிந்துள்ளனர். இம்முறை, ஹார்மனி கொரோனா பரிசோதனை எனப்படுகிறது. இதில், சார்ஸ் கோவ்-2 வைரஸிற்கான  மரபணுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பேரி லூட்ஸ் தெரிவித்திருப்பதாவது, குறைவான விலையில், எந்த இடத்திலும் பயன்படும் அளவிற்கு
எளிய முறையில் இந்த பரிசோதனையை கண்டறிந்திருக்கிறோம். இந்த பரிசோதனை உலகம் முழுக்க அணுகக்கூடிய வகையில் இருக்கும்.
மொபைல், டிடெக்டரை இயக்குவதற்கும், முடிவை அறியவும் பயன்படுகிறது. நிலையாக இருக்கும் வெப்ப நிலையில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 20 நிமிடங்களில் முடிவு கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார். இது ஒமிக்ரான் தொற்றை கண்டறியவும் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |