ஜப்பான் அரசு ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தலால், இந்திய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று முதன் முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. அதன் பின்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கியது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கடந்த மாதம் 30ஆம் தேதியன்று முதல் ஓமிக்ரோன் பாதிப்பு கண்டறியப்பட்டது. எனவே, தற்போது அங்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தியா உட்பட சில நாடுகளுக்கு கடும் விதிகளை நடைமுறைப்படுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறது.