உலக சுகாதார மையம், உலக நாடுகளில் கொரோனா தொற்று 24% குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியா மற்றும் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய 40% மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா பரவல் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியிருக்கிறது.
எனினும், ஆசியாவின் ஒரு சில இடங்களில் அதிகமாக இருக்கிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தினுடைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ், கொரோனா தொற்றுடன் வாழ வேண்டிய நிலையில் உள்ளோம். ஒரு வாரத்தில் உலக நாடுகளில் சுமார் 15,000 மக்கள் கொரோனா பாதித்து உயிரிழந்திருக்கிறார்கள்.
கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. எனினும் இறப்பு விகிதம் நான்கு வாரங்களில் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று தற்போது வரை நம்மிடம் இருந்து விலகவில்லை. எனவே, மக்கள் விதிமுறைகளை பின்பற்றுவதை கைவிட்டு விடக்கூடாது.
தற்போது வரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் உடனடியாக எடுத்துக் கொள்வது நல்லது. இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் தவணையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நம்மையும் நம்மை சுற்றியிருப்பவர்களையும் பாதுகாக்கும் என்று கூறியிருக்கிறார்.