ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் முக்கிய தீர்மானம் செய்திருக்கிறார்.
ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான Jens Spahn, கோடைக் காலத்திற்கு பின்பு அடைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களை மீண்டும் திறக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திருக்கிறார். ஜெர்மனி நாட்டின் தடுப்பூசிக்கான நிலைக்குழு, 70 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்க பரிந்துரை செய்திருக்கிறது.
மேலும், கோடைகாலத்தில் தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்தது. எனவே, அதன் பின்பு தடுப்பூசி எடுத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் குறைந்துவிட்டது. அதிகாரப்பூர்வமான புள்ளி விவரங்களின் படி, நாட்டில் 83 மில்லியன் மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கு நபர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தற்போது மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனவே, சுகாதார அமைச்சர் முடிந்த அளவிற்கு விரைவில் அதிக நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்றும் செப்டம்பர் மாத கடைசியில், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி மையங்களை மீண்டும் செயல்படுத்த தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.