Categories
உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்த கொரோனா…. லட்சக்கணக்கானோர் பலியாகலாம்… நிபுணர் விடுத்த எச்சரிக்கை…!!!

சீன நாட்டில் 60% மக்கள் கொரோனா தொற்றால் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாகவும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் மூத்த தொற்று நோயியல் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தது. எனவே, கொரோனா பரவல் குறைய தொடங்கியது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர். எனவே, சீன அரசு, கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

இதனைத்தொடர்ந்து அங்கு கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிகமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், மூத்த தொற்று நோயியல் நிபுணரான  எரிக் பீகல் டிங், இன்னும் மூன்று மாதங்களில் 60%-த்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்திருக்கிறார்.

மேலும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகலாம் என்றும் கூறியிருக்கிறார். பிஜிங் நகரில் மயானங்களில் பிணங்கள் குவிந்து வருவதால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடும் பணிச்சுமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |