சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் கடும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள பல பகுதிகளில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டிருகிறது. அங்கு, சுமார் 43 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.
எனவே, இருமல் சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு மருந்து வாங்குபவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுக்கு 72 மணி நேரங்களுக்குள் கொரோனா பரிசோதனை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.