ரஷ்யாவில் ஒரே நாளில் சுமார் 1,21,228 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் நாடு மூன்றாம் இடத்திலும் இருக்கிறது. அந்நாடுகளில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது.
இந்நிலையில் இப்பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 228 அநபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இது மிகவும் அதிகமாகும். மேலும், ஒரே நாளில் 617 நபர்கள் கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர்.