சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் நேற்றிலிருந்து 40 சுரங்க ரயில்கள் அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
சீனாவில் பெய்ஜிங் நகரில் கொரோனா ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதை தவிர்க்க அந்நகரத்தின் 40 சுரங்க ரயில் நிலையங்கள் நேற்றிலிருந்து அடைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். அந்த சுரங்க ரயிலில் நிலையங்களை மீண்டும் எப்போது திறப்பார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை.
பெய்ஜிங் நகரில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்நகரத்தை எச்சரிக்கை நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.