வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் கொரோனா ஒரு பெரும் பேரழிவு என்று கூறியிருக்கிறார்.
வட கொரியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவு என்று கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் அவசரக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்து ஒரு முழு போருக்கு அதிகாரிகளை அழைத்தார். நேற்று ஒரே நாளில் அங்கு 1,74,440 நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.
இதில், தற்போது வரை 21 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு பலியானார்களா? என்று வடகொரியா தெரிவிக்கவில்லை. 21 நபர்களும் காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது.