சுவிட்சர்லாந்தில், கொரோனா சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்தில் முன்னரே அறிவித்தபடி, கொரோனா சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காகிதம் அல்லது மின்னணு வடிவத்தில் இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதனை சர்வதேச பயணம் தொடங்கி பலவற்றிற்கு பயன்படுத்தலாம். மேலும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.
அதாவது கொரோனா சான்றிதழ் light என்று மற்றொன்றும் உருவாக்கப்படவுள்ளது. இந்த light சான்றிதழை நாட்டிற்குள்ளாக மட்டும் உபயோகிக்கலாம். அதாவது தகவல்கள் திருடுவதை கட்டுப்படுத்துவதற்காக இச்சான்றிதழ் உருவாக்கப்பட்டுள்ளது. பயணம் மேற்கொள்வதற்கு கொரோனா சான்றிதழ் அவசியமில்லை, என்றால் அதற்கு பதிலாக இந்த light சான்றிதழை வாங்கிக் கொள்ளலாம்.
தேவைப்படும் பட்சத்தில் அதனை உணவகங்கள், விளையாட்டுப்போட்டிகள் போன்றவற்றிற்கு செல்லும்போது உபயோகிக்கலாம். இந்த light சான்றிதழானது வரும் ஜூலை மாதத்தில் உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.