Categories
உலக செய்திகள்

தோன்றிய நாட்டிலேயே தலை தூக்கியது கொரோனா.. 48 பேர் பாதிப்பு.. வெளியான தகவல்..!!

சீனாவில் சமீப தினங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுக்க கொரோனா தொற்று பரவியதால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. எனவே உலக நாடுகளில் தற்போது கொரோனா குறைய தொடங்கியுள்ளது. சில நாடுகள் கட்டுப்பாடுகளை நீக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டார்கள்.

எனினும் கொரோனா முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவில் தான். ஆனால் குறுகிய காலத்தில் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியிருக்கிறது. நேற்று 48 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போது வரை 92,462 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |