Categories
உலக செய்திகள்

குவாத்தமாலாவில் அவசர நிலை பிரகடனம்.. ஜனாதிபதி அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

அமெரிக்காவின் மத்திய நாடான, குவாத்தமாலாவில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு பரவுவதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாத்தமாலாவில் தினசரி டெல்டா மாறுபாடு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குவாத்தமாலா அரசு தொற்றை கட்டுப்படுத்த அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறது.

நாட்டின் ஜனாதிபதி, Alejandro Giammattei தெரிவித்துள்ளதாவது, டெல்டா மாறுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும், புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு குவாத்தமாலா மட்டும் விதி விலக்கு இல்லை. எனவே, இரவு  பத்து மணியிலிருந்து அதிகாலை நான்கு மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். மேலும் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |