செக் குடியரசு நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செக் குடியரசு நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் புதிதாக 53 ஆயிரத்து 441 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்து 43 ஆயிரத்து 84 ஆக அதிகரித்திருக்கிறது.
மேலும் நேற்று ஒரே நாளில் 11 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 37,243 ஆக அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். மேலும் தற்போது வரை 27,05,480 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து இருக்கிறார்கள்.