இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது.
உலக அளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சீரழித்து வரும் கொரோனா இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனாவை உலக நாடுகள் பல ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் தற்போதுவரை உலகளவில் பாதிப்புகளின் எண்ணிக்கை 92 லட்சத்து 42 ஆயிரத்து 210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் உயிரிழப்புகள் மட்டும் 475,329 ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்து 82 ஆயிரத்து 514 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு தற்போது 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,48,190 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,78,014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் யுனிசெப் அமைப்பு கூறிய கருத்து இந்தியா உட்பட பலவேறு நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.