உலக நாடுகளில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. எனவே பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நாடுகளில் தடுப்பூசிகள் பணிகள் தீவிரமாக்கப்பட்டதோ அங்கே கொரோனா குறைய தொடங்கியுள்ளது. எனவே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள்.
இந்நிலையில் உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 17,95,34,405 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 16,41,62,300 நபர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டார்கள். மேலும் 1,14,83,750 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.