Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“இதுதான் சாதனை” விளக்கு வெளிச்சத்திலிருந்து ஓர் மருத்துவர்…. கோவை மாணவிக்கு குவியும் பாராட்டு…!!

இந்தியாவைப் பொருத்தவரையில் பள்ளியை தாண்டி மாணவர்கள் டியூஷன் இன்ஸ்டியூட்டில் அதிகம் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். பெற்றோர்களும் அதிகமாக பொருட்செலவு செய்து நல்ல இன்ஸ்டியூட்டில் தங்களது பிள்ளைகளை சேர்த்து படிக்க வைத்து வருகிறார்கள். ஆனால் இப்படி எந்த ஒரு வசதியும் இல்லாமல், மிகவும் ஏழ்மையான நிலையில் அரசுப்பள்ளியில் படித்து அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை புரியக்கூடிய மாணவ மாணவிகளை ஒவ்வொரு ஆண்டும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில்,

மண்ணெண்ணை விளக்கு வெளிச்சத்தில் படித்த அரசுப் பள்ளி மாணவி மருத்துவ கல்லூரியில் கால்பதிக்கும் நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவி ரம்யாவிற்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் உறுதியாகியுள்ளது. மின்சார வசதி இல்லாத வீட்டில் இருந்தாலும் கூட, தனது கடின உழைப்பால் மருத்துவ படிப்பு கனவை நினைவாக்கி  பல ஏழைகளின் வாழ்வில் ஒளியாய் மாறியிருக்கிறார் ரம்யா. அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

Categories

Tech |