புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் உயிரிழந்ததிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் பொதுமுடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்னை குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. ஏற்கனவே இரண்டு முறை இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது புலம்பெயர் தொழிலாளர்களிடம் ரயில், பேருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர அனைத்து மாநில அரசுகளுக்கும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட பிறப்பித்துள்ளது.
மேலும் புலம்பெயந்த தொழிலாளர்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த மாநிலங்களுக்கும் தங்களது அறிக்கையை சமர்பித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு இன்று (ஜூன் 9ம்) ஒத்திவைத்திருந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புலம்பெயந்த தொழிலாளர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும், அதெற்கென இலவச ஆலோசனை மையங்கள் அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டறிந்து 15 நாளில் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பினால் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.