Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னட நடிகர் யஷ்க்கு வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு…!!!

கன்னட நடிகர் யஷ்க்கு தற்போது வசித்துவரும் வாடகை வீட்டை காலி செய்ய கோர்ட்டு உத்தரவு.

பிரபல கன்னட நடிகர் யஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கே.ஜி.எப். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. பெங்களூரு கத்திரிகுப்பே பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது தாய் புஷ்பாவுடன் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கு மாத வாடகை ரூ.40 ஆயிரம். இந்நிலையில் யஷ் பல மாதங்கள் வாடகை செலுத்தவில்லை இதையடுத்து வீட்டு உரிமையாளர் வாடகை பாக்கியை செலுத்திவிட்டு வீட்டை காலி செய்யுமாறு கூறுயுள்ளார்.

யஷ் க்கான பட முடிவு

இதனால் நடிகர் யஷ்சுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் யஷ் மீது கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீட்டை காலி செய்யும் படி உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து யஷ்சின் தாயார் புஷ்பா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

யஷ் க்கான பட முடிவு

அந்த மனுவில் நாங்கள் சொந்தமாக ஒரு வீடு கட்டிக்கொண்டிருக்கிறோம். கட்டுமான பணிகள் நடந்து வருகிறது முடிவதற்கு 6 மாதங்கள் ஆகும். அதுவரை இந்த வீட்டில் வசிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு வீட்டு உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து இரண்டு  மாதங்கள் அவகாசம் கொடுத்து, மே மாதம் 31-ந் தேதிக்குள் வீட்டை காலி செய்ய நீதிமன்றம்  உத்தரவிட்டது.

 

Categories

Tech |