ஊடகங்கள் தன்மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்
கிங் பிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான விஜய் மல்லையா இந்தியாவில் பல வங்கிகளில் 9000 கோடிக்கும் மேல் கடன் வாங்கிவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு சென்று விட்டார். கடன் தொகையை திருப்பிக் கொடுக்காமல் லண்டனுக்கு தப்பி ஓடிய விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசின் கீழ் இயங்கிவந்த விசாரணை அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.இதைதொடர்ந்து லண்டனில் இருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை கொண்டுவர ஒப்புதலும் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஜய் மல்லையா தொடுத்த மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து விஜய் மல்லையா கூறியதாவது, “நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தம் அளிப்பதாக இருந்தாலும் தொடர்ந்து சட்டப் போராட்டத்தை செய்துகொண்டே இருப்பேன். ஊடகங்கள் என் மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்குகின்றன. கடன் பெற்ற தொகையில் இதுவரை 2,500 கோடியை கட்டியுள்ளேன் மீதமுள்ள தொகையையும் கட்டுவதற்கு தயாராகவே இருக்கின்றேன்” என கூறினார்.