Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்த உதவிய பெண்….. கொத்தனார் செய்த காரியம்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் கொத்தனாரான வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். சாமியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கவிதா(37) என்பவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு வினோத் கவிதாவின் உதவியுடன் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வினோத், கவிதா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் வினோத்துக்கு 20000 ரூபாய் அபராதமும், 40 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் கவிதாவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |