Categories
தேனி மாவட்ட செய்திகள்

“எனக்கு மதுபானம் வாங்கி தா” கொலை செய்யப்பட்ட டீக்கடை ஊழியர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

டீக்கடை தொழிலாளி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்ற டீ கடை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் பேருந்து நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நின்று கொண்டிருந்தபோது, சுக்காங்கல்பட்டி தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான அஜய் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அஜய் மணிகண்டனை அழைத்து தங்களுக்கு மதுபானம் வாங்கித் தருமாறு கட்டாயபடுத்தி உள்ளார்.

ஆனால் மணிகண்டன் மதுபானம் வாங்கி தராததால், அவரை கீழே தள்ளிவிட்டு அஜய் அவரது மார்பில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் உள்ளவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்துவிட்டார்.

இதுகுறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் மணிகண்டனின் மைத்துனர் மகேந்திரன் என்பவர் புகார் அளித்தார். அந்தப் புகாரின் கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அஜய், மணிகண்டன், அரவிந்த் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜய்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து மணிகண்டன் அரவிந்த் ஆகிய இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், நீதிபதி உயிரிழந்தவரின் மனைவி கோமதி சட்ட உதவி மையத்தில் மனு அளித்து அரசு தரப்பில் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |