Categories
அரசியல் உலக செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. கர்ப்பிணியை கடத்தி கொன்று குழந்தை திருட்டு… தம்பதி கைது…!!!

மெக்சிகோ நாட்டில் கர்ப்பிணி பெண்ணை கடத்தி சென்று கொலை செய்து அவரின் வயிற்றிலிருந்த குழந்தையை ஒரு தம்பதி திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மெக்சிகோவில் உள்ள வெராகுரூஸ் என்ற நகரத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 20 வயதுடைய ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் என்ற அந்த கர்ப்பிணி பெண்ணை ஒரு தம்பதியர் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.

அதாவது, ஒரு தம்பதி இணையதளத்தின் வழியே ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவரிடம், உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தேவைப்படும் உடைகளை நாங்கள் தருவதாக அந்த தம்பதி தெரிவித்திருந்தனர். இதை நம்பி அவரும் விமான நிலையத்தின் அருகில் இருக்கும் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், ” ரோசா ஐசலாவுடன் பேசிய அந்த பெண் படபடப்பாக இருந்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து வாகனத்தில் அவரை அழைத்துச் செல்கிறார். அதன் பின் அந்த கர்ப்பிணி பெண் உயிரோடு இல்லை. மேலும், அந்த தம்பதியினரிடம் திடீரென்று ஒரு குழந்தை இருந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதன் பிறகு தான் கர்ப்பிணி பெண்ணை அழைத்துச் சென்று அவரை கொன்று வயிற்றில் இருந்த குழந்தையை  அந்த தம்பதி எடுத்திருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. அந்த தம்பதி தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து குழந்தையும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |